தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் திருவிழா கொண்டாட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த மல்லர் கம்பம் நிகழ்ச்சி - தர்மபுரி மாவட்ட ஆட்சியர்

தர்மபுரி: மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், மாணவர்கள் செய்த மல்லர் கம்பம் நிகழ்ச்சி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

மல்லர் கம்பம் நிகழ்ச்சி
மல்லர் கம்பம் நிகழ்ச்சி

By

Published : Jan 12, 2021, 10:47 PM IST

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழா தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தாண்டு தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜன.12) காலை முதல் திருவிழாக்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கிராமிய கலைஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் மாவட்ட ஆட்சியர்

அரசு துறைகளை சார்ந்த மாவட்ட அலுவலர்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் இந்த பொங்கல் விழாவில் இடம்பெற்றது. கோலப் போட்டி, சாக்குப்பை குதித்தல், பலூன் ஊதுதல், ஊசி நூல் கோர்த்தல், கையில் தண்ணீர் எடுத்து நிரப்புதல், உரி அடித்தல், மியூசிக்கல் சேர், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த பொங்கல் விழாவில் இடம்பெற்றது.

பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

குறிப்பாக தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், மாணவர்கள் செய்த மல்லர் கம்பம் நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது. பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இந்த பொங்கல் விழாவில் இடம்பெற்றது. கிராமிய கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. கார்த்திகா ஊக்கத் தொகையை வழங்கினார்.

பொங்கல் திருவிழா கொண்டாட்டம்... பார்வையாளர்களை கவர்ந்த மல்லர் கம்பம் நிகழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details