சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் கோவிலுக்குச் சென்ற ஓசூரைச் சேர்ந்த மாதம்மாள் (வயது 70), அவரது சகோதரி இலட்சுமி (68) இருவரும் 144 தடை உத்தரவுக்கு முன் மேட்டூரில் உள்ள கோவிலுக்குச் சென்று உள்ளனர்.
144 தடை உத்தரவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அறியாத காரணத்தால் சில தினங்கள் மேட்டூரில் இருந்துவிட்டு அங்கிருந்து தருமபுரி வழியாக ஓசூர் செல்ல முடிவு செய்த இரண்டு சகோதரிகளும் மேட்டூரிலிருந்து நடந்து செல்ல தொடங்கினர்.
மெல்ல மெல்ல ஒரு மாதமாக நடந்து வந்த சகோதரிகள் தருமபுரி நகரப்பகுதி வந்தடைந்தனர். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர் தருமபுரி வட்டாட்சியர் சுகுமாரை தொடர்புகொண்டு முதியோர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினார்.
ஊரடங்கு விவரம் தெரியாமல் நடந்துச் சென்ற மூதாட்டிகள் இதன் பின்னர் இரண்டு சகோதரிகளையும் தருமபுரி வட்டாட்சியர் மீட்டு நடக்க இயலாமல் தவித்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்து தருமபுரியில் உள்ள மெர்சி ஹோம் என்னும் கருணை இல்லத்தில் தங்கவைத்தார். அலுவலர்கள் இரண்டு சகோரிகளின் வாரிசுதாரர்களை தொடர்புகொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்த பின்னர் மாதம்மாள் அரூர் அருகே உள்ள மதியம்பட்டியிலுள்ள உறவினர் வீட்டிற்கும் தங்கை இலட்சுமி சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அவரது உறவினர்களிடமும் நேரில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க... மஞ்சூரிலிருந்து சொந்த ஊருக்கு நடந்துசென்றவர்களை லாரியில் அனுப்பிவைத்த வருவாய்த் துறையினர்