தமிழ்நாடு

tamil nadu

தருமபுரியில் 400 காவலர்களுக்கு மளிகைப்பொருள் தொகுப்புகள் வழங்கிய ஆட்சியர்

By

Published : Apr 20, 2020, 3:30 PM IST

தருமபுரி: காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் வழங்கிய நிவாரண உதவி மூலம் 400 காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மளிகைப்பொருள் தொகுப்புகளை வழங்கினார்.

மளிகை தொகுப்புகள் வழங்கிய ஆட்சியர்
மளிகை தொகுப்புகள் வழங்கிய ஆட்சியர்

கரோனா காரணமாக தங்களால் முடிந்த நிவாரண நிதிகளை தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், தனியார் அமைப்பினர் உள்ளிட்ட யாரேனும் வழங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி பல்வேறு அமைப்பினர் நிவாரண நிதிகளையும், உதவிகளையும் வழங்கிவருகின்றனர்.

மளிகைப்பொருள் தொகுப்புகள் வழங்கிய ஆட்சியர்

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மாவட்டத்தில் உள்ள காவலர்கள், ஆயுதப் படை காவலர்கள் 400 பேருக்கு மளிகைப் பொருள்களை வழங்க முன்வந்தார்.

1200 ரூபாய் மதிப்புள்ள அந்த மளிகைப்பொருள் தொகுப்பை வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி காவலர்களுக்கு அவற்றை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், கூடுதல் கண்காணிப்பாளர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:சேவை மானப்பான்மையுடன் மளிகைப் பொருள்கள் விற்பனைசெய்யும் வியாபாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details