தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க, பெற்றோர்களிடம் அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. அதன்படி இன்று (ஜன.19) முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில் தருமபுரியில் தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவர் டிஎன்சி. இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 10,12ஆம் வகுப்பு படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முழுவதும் பின்பற்றப்படும். ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலையை கணக்கிடுதல், தனி மனித இடைவெளி பின்பற்றப்படும்.