தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வரவேற்பு! - தருமபுரி வந்த எடப்பாடி பழனிசாமி

தருமபுரி: சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி வழியாக, சேலம் சென்ற முதலமைச்சர் பழனிசாமியை மாவட்ட ஆட்சியர் மலர்விழி வரவேற்றார்.

முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வரவேற்பு
முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வரவேற்பு

By

Published : Jul 15, 2020, 9:17 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 15) மூன்றாவது மாவட்டமாக, கிருஷ்ணகிரியில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி வழியாக சேலம் புறப்பட்டார். தருமபுரி மாவட்ட எல்லை காரிமங்கலம் சோதனைச் சாவடியில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சு. மலர்விழி தலைமையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், சார் ஆட்சியர் மு. பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் பெற உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details