தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி முயற்சி: டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி

தருமபுரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி நீடிக்கும் என்ற எண்ணத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார் என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

dhinakaran

By

Published : Jul 15, 2019, 12:42 PM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் மக்கள் மனநிலையை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர், சட்டப்பேரவை இடைதேர்தலில் 9 தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு ஆட்சி நீடிக்கும் என்ற நம்பிக்கையில் 8 வழி சாலை போன்ற திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறார். மக்கள் நிச்சயம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவார்கள் என்று கூறினார்.

எடப்பாடி எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி: டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கட்சியை பதிவு செய்யும் வேலையில் உள்ளது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட கூடிய சூழ்நிலை உள்ளதால், அங்கு போட்டியிடவில்லை. தற்போது தேர்தலில் போட்டியிட்டால் மூன்று தொகுதிகளுக்கும் மூன்று சின்னம் வழங்குவார்கள், எனவே கட்சியை பதிவு செய்த பிறகு ஒரு சின்னம் வழங்கிய பிறகு தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details