தருமபுரி: சேலம், தருமபுரி மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (செப். 29) சென்றார். அங்குப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் இன்று (செப். 30) ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1928.80 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டுமுதல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஆய்வுசெய்த முதலமைச்சர் தருமபுரி நகராட்சியை உள்ளடக்கிய 10 பேரூராட்சிகள், இரண்டாயிரத்து 835 கிராமங்களுக்கு நாளொன்றுக்கு 650 லட்சம் லிட்டர் குடிநீர் 15.84 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுவருகிறது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் நீரேற்று நிலையம், யானைபள்ளம் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை ஆய்வுசெய்து தண்ணீர் வரத்து குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: குற்றால அருவிகளில் குளிக்க அனுமதியா?