தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடம் இருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் 13.11.2020 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.