தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக இடைவெளியுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

தர்மபுரி: பாலக்கோடு அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் சமூக இடைவெளியுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

kudam
kudam

By

Published : Apr 16, 2020, 1:21 PM IST

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள பெலமானஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பாவாளி கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்திலும் கூட, அத்தியாவசியங்களில் ஒன்றான தண்ணீர் கிடைக்கவில்லை.

காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இதனால் அப்பகுதிகளில் காலிக் குடங்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமானி, மல்லாபுரம், பெல்ரம்பட்டி சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணிநேர சாலை மறியலுக்குப்பின், மாரண்டஹள்ளி காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தண்ணீர் வழங்க முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details