தருமபுரியில், நகரப் பேருந்து நிலையம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. இன்று தருமபுரி நகராட்சியின் சார்பில், தருமபுரி நகரப் பேருந்து நிலையம் மற்றும் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இரண்டிலும் டேங்கர் லாரி மூலம் கிருமிநாசினி கலந்த தண்ணீர் தெளித்தனர்.
நகரப் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகள் தீவிரம் - Cleaning the bus station
தருமபுரி: நகரப் பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி டேங்கர் லாரி மூலம் தெளித்து தூய்மைப்படுத்தினர்.
தூய்மைப் பணியில் நகராட்சி பணியாளர்கள்
இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும், பொதுமக்கள் அதிகமாக பேருந்து நிலையத்திற்க்கு வந்து செல்வதால், கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா வைரஸால் பால் உற்பத்தியில் பாதிப்பா?