தர்மபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2012 குறித்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மலர் விழி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் பெண் குழந்தைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் எதுவும் நடைபெற்றால் அதனை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.