தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாரடைப்பை கண்காணித்து தடுத்து சிகிச்சையளிக்க உரிய உபகரணங்கள் இல்லாதததால் மருத்துவக்கல்லூரிக்கு வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமவைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
தர்மபுரி மருத்துவமனையில் ஆஞ்சியோ ஆய்வகம்: காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்!
தர்மபுரி: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய உள் ஊடுருவி கணிப்பு ஆஞ்சியோ ஆய்வகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 3.5 கோடி மதிப்பில் மாரடைப்ப சிகிச்சையளிக்க ஏதுவாக இருதய உள் ஊடுருவி கணிப்பு ஆஞ்சியோ தனி ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. ஆய்வகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவர்கள், பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.