தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெறிச்சோடிப் போன ஒகேனக்கல்! - hoganakkal dam

தர்மபுரி: நீர்வரத்து காரணமாக ஒகேனக்கலில் உள்ள தடுப்பு கம்பி வேலிகள், நடை மேடை சேதமடைந்ததால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஒகேனக்கல் அணை வெறிச்சோடி கிடக்கிறது.

வெள்ளப்பெருக்குக்கு பின்னும் வெருச்சோடி போன ஒகேனக்கல்

By

Published : Aug 18, 2019, 3:44 AM IST

கர்நாடக மாநிலத்தில் இருந்து 3 லட்சம் கனஅடி காவிரி நீர் ஒகேனக்கலுக்கு திறந்து விடப்பட்டது. நீர்வரத்து காரணமாக தமிழக பகுதியில் சுற்றுலா பயணிகள் ஐவர் பவானியை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் மாடம் (வாச்டவர்) முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

ஒகேனக்கல் அணை

கர்நாடகப் பகுதிகளில் இருந்து ஐவர் பவானியின் அழகை கண்டு ரசிக்க கர்நாடக சுற்றுலாத் துறை அமைத்திருந்த பாலமும் பெருக்கெடுத்து வந்த தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் பாதைகளில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பி வேலிகள், நடைமேடை போன்றவையும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

தற்போது குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details