காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கபினி அணையிலிருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீரும்; கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 5) காலை ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து 3,500 கனஅடியாக இருந்தது. நண்பகல் நீர்வரத்து ஆயிரம் கனஅடி உயர்ந்து 4,500 கன அடியாக மாறியது.