தருமபுரி மாவட்டம் நால்ரோடு பகுதியில் நேற்று (டிச. 08) வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரியில் திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு! - DMK MLA in Dharmapuri
தருமபுரி: வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டம் செய்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட 174 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
farmers issue
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணி கட்சியினர் நால்ரோடு பகுதியில் இருந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டு தருமபுரி தலைமை தபால் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட 174 நபர்கள் மீது தருமபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.