தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி போனஸ் 20% உயர்த்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 650 பேர் மீது வழக்குப்பதிவு! - Transport Workers Roadblack in Dharmapuri

தருமபுரி: தீபாவளி போனஸ் 20 சதவீதம் உயர்த்தக் கோரி சாலை மறியல் செய்த 650 போக்குவரத்து தொழிலாளர்கள் மீது தருமபுரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி
தருமபுரி

By

Published : Nov 10, 2020, 1:01 PM IST

தருமபுரி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் எதிரில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் போனஸ் 20% வழங்க வேண்டும், பத்தாயிரம் ரூபாய் முன்பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 650 பேர் மீது தருமபுரி நகர காவல் துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

144 தடை உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்ததாக ஏஐடியுசி மாநிலச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட 650 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details