தருமபுரி எம்.பி. மீது வழக்குப்பதிவு - தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி
தருமபுரி: மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட 2, 737 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்தத்தை கண்டித்து திமுக, கூட்டணி கட்சியினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய தருமபுரி ரவுண்டானா பகுதியில் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 737 பேர் மீது தருமபுரி மாவட்ட காவல் துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.