தருமபுரிபாலக்கோடு அருகே கண்டகபைல் மலைக்கிராமத்திலிருந்து பாலக்கோட்டில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, திரும்பும்போது மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து, நிலைத்தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்தது. இவ்விபத்தில் சென்னசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (60) என்பவர் உயிரிழந்தார்.
மேலும் வாகனத்தில் வந்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று பின்பு தருமபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.