தருமபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கேரட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரும் இவரது உறவுக்கார பெண் ஒருவரும் பென்னாகரத்தில் இருந்து ஆலம்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
மதுபோதையில் காரில் அதிவேகமாக சென்ற சுற்றுலாப் பயணி: இளைஞர் பலி - கார்
தருமபுரி: ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணி ஒருவர் மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒருவர் பலியானார்.
ஆலம்பாடி அருகே சென்ற போது, அதி வேகத்தில் எதிரே வந்த கார் ஒன்று ரவியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இதில், ரவி நிகழ்விடத்திலே உயிரிழந்தார். உடன் வந்த உறவுக்கார பெண் பலத்த காயங்களுடன் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ரவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைத்தனர். பின் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மது போதையில் கார் ஓட்டியதே காரணம் என தெரிவித்தனர். விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.