தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, தொப்பூர் கணவாய் பகுதியின் அருகே, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து, திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது, பின்னால் வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த, திருப்பத்தூர், கங்கனாம்பளையம் பகுதியைச் சேர்ந்த சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் ரமேஷ் படுகாயமடைந்தார்.