தருமபுரி மக்களவை தொகுதியில் இறுதி வேட்டபாளர் பட்டியலை பொதுப்பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி இன்று வெளியிட்டார். திமுக, பா.ம.க உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில் மொத்தம் 27 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் நான்கு வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இன்று ஏட்டு வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப்பெற்று கொண்டனர்.
வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கியப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி, " தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்று நிறைவுபெற்றது. இறுதியாக 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறிதது விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.