தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பரித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்! - protest at dharmpuri

தர்மபுரி: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 19, 2019, 1:29 PM IST

Updated : Dec 19, 2019, 2:53 PM IST

சமீபத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, தருமபுரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜஹாங்கீர் மற்றும் குழந்தைகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, 'தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து, நிறைவேற்றி இருப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும் . மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக் கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு சொல்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஆர்ப்பாட்டம்

இதில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் உரிமை மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் எனக் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வரலாற்றில் முதன்முறை... அமெரிக்காவின் மேயரான ஏழு மாதக் குழந்தை!

Last Updated : Dec 19, 2019, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details