நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை! - தருமபுரி நடத்துநர்
தருமபுரி: அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ. 3 கோடியே 47 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
election
அதேபோல், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக பல்வேறு சிறப்பு பறக்கும் படைகளை அமைத்து தேர்தல் ஆணையமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தருமபுரியில் இருந்து அரூர் வரை சென்ற அரசு பேருந்தில் ரூ. 3 கோடியே, 47 லட்சம் ரொக்கப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணத்திற்கு இதுவரையில் யாரும் உரிமை கோரிடாத நிலையில், இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Apr 4, 2019, 10:33 AM IST