தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவிலிருந்து அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு மதுரையை நோக்கிச் சென்ற லாரி, எதிரே வந்த தனியார் சொகுசுப் பேருந்து மீது மோதியது. இச்சம்பவத்தின் போது பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு லாரியும் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் அரிசிபாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர், சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (34) சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார்.
சொகுசுப் பேருந்து - லாரி மோதி விபத்து: இருவர் பலி; 13 பேர் படுகாயம்! - தர்மபுரி பஸ் விபத்து
தருமபுரி: தனியார் பேருந்தின் மீது அடுத்தடுத்து இரண்டு லாரிகள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
![சொகுசுப் பேருந்து - லாரி மோதி விபத்து: இருவர் பலி; 13 பேர் படுகாயம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3990218-thumbnail-3x2-bb.jpg)
lorry accident in dharmapuri
விபத்தில் சிக்கிய பேருந்து
மேலும், லாரியின் கிளீனர், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என 13 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.