தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு - கண்டுகொள்ளாத அலுவலர்கள்! - ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

தருமபுரி: அரூர் நான்கு ரோட்டில் இரண்டு மாதமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனைச் சரிசெய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Okanagan Joint Drinking Water pipeline
Okanagan Joint Drinking Water pipeline

By

Published : Nov 2, 2020, 8:27 PM IST

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்திசெய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. அரூர் ரவுண்டானாவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் பிரித்து அனுப்பப்பட்டுவருகிறது.

இந்நிலையில், அரூர் நான்கு ரோடு பகுதியில் அதிகப்படியான வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்வதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பால் தினமும் தண்ணீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் சிறிது சிறிதாக பள்ளம் தோன்றியுள்ளது.

கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

இது குறித்து குடிநீர் குழாய் உடைப்பு பேரூராட்சி அலுவலர்கள், கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துவருகின்றனர். எனவே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் முன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயை சரிசெய்தும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தைச் சீர்செய்யவும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருப்பூர் தனியார் சீட்டு கம்பெனி முற்றுகை: வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக புகார்

ABOUT THE AUTHOR

...view details