தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கல் காவிரி ஆற்று சுழலில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு - dharmapuri district news

தர்மபுரி: உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் காவிரி ஆற்றில் குளித்தபோது சுழலில் சிக்கி உயிரிழந்தார்.

சிறுவன் உயிரிழப்பு
சிறுவன் உயிரிழப்பு

By

Published : Jan 8, 2021, 6:06 AM IST

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அஸ்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் திவாகரன்(17). இவர்கள் பென்னாகரம் மாங்கரை கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் திவாகரன் தனது உறவினருடன் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை காவிரி ஆற்றுப்பகுதிக்கு குளிக்க சென்றார். காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது திவாகரன் திடீரென சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதனைப் பார்த்த உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி, முதலைப் பண்ணை பகுதியில் திவாகரனை உடலை மீட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் உடலை உடற்கூராய்விற்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரயில் பெட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details