தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இஸ்லாமிய இளைஞா்குழு சார்பில் ரத்ததான முகாம்

தருமபுரி: இஸ்லாமிய இளைஞா்குழு சார்பில் நடைபெற்ற மாபெரும் ரத்த தான முகாமில் இளைஞர்கள் பலர் தாமாக வந்து ரத்தம் வழங்கினர்.

Bloody camp on behalf of the Islamic Youth Group
Bloody camp on behalf of the Islamic Youth Group

By

Published : Jul 16, 2020, 2:54 AM IST

தருமபுரி அரூா் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலருக்கு ரத்த தேவை அதிகரித்துள்ளது. ஆனால் கரோனா பரவல் காரணமாக பொதுமக்களும் ரத்ததானம் செய்துள்ளவர்களும்கூட ரத்தம் கொடுக்க முன்வர தயங்குகின்றனர்.

இது குறித்து அறிந்த அரூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் குழுவினர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டு மாபெரும் ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர், இந்நிலையில் நேற்று அரூர் வருண தீர்த்தம் அரசு பள்ளியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தருமபுரி அரூா் பகுதியில் ரத்ததான முகாம்

இந்த ரத்ததான முகாமிற்கு அரூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வந்து ரத்ததானம் வழங்கினர். மேலும் முகாமில் இளைஞர்களுக்கு உடல் வெப்பத்தைக் கணக்கிட்டு முறையான பரிசோதனை செய்த பிறகே ரத்ததானம் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் குழு சார்பில் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: உலக ஹீமோபிலியா தினம் - நாம் அறிந்துகொள்ள வேண்டியவை...

ABOUT THE AUTHOR

...view details