தர்மபுரி: பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தில் பாரதமாதா கோயில் அமைந்துள்ளது. ஆனால் இந்த கோயிலுக்கு பாரதமாதா நினைவாலயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் நினைவிடங்களுக்கே நினைவாலயம் என்று வைப்பார்கள். ஆகவே இந்த கோயிலுக்கு பாரதமாதா ஆலயம் என்று விரைவில் பெயர் மாற்ற செய்ய வேண்டும். அப்படியில்லையென்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
அப்போது அதிமுக ஆட்சியிலேயே நினைவாலயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதிமுக முட்டாள் என்றும் நாங்கள் தான் அறிவாளி என்றும் திமுகவினர் சொல்கிறார்களே. அப்படியென்றால் நீங்கள் மாற்றி இருக்க வேண்டாமா எனத் தெரிவித்தார்.