தருமபுரி மாவட்டம் வத்தல்மலை பகுதியில் இருந்து உருவாகி வருவது சனத்குமார் நதி. மலைப் பகுதியிலிருந்து உருவாகி வரும் இந்த நதி அதியமான்கோட்டை, அன்னசாகரம், மதிகோண்பாளையம் வழியாக பாய்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணமாக சனத்குமார் நதியில் தற்போது சாக்கடை நீர் மட்டுமே நிறைந்துள்ளது.
சனத்குமார் நதியை தூய்மைப்படுத்தக்கோரி பாஜக மனு - தூர்வாரக் கோரி
தருமபுரி: சனத்குமார் நதியை தூய்மைப்படுத்தக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் இன்று மனு அளித்தனர்
சனத்குமாரா நதி தூர்வாரக்கோரி பாஜக மனு
மேலும் சிலர் நதியை ஆக்கிரமித்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கு புதர்மண்டி கிடக்கும் சனத்குமார் நதியை தூய்மை செய்து ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பாஜகவினர் இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.