தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி அருகே யானை மீது ஐயப்பன் சுவாமி ஊர்வலம்

தருமபுரி அருகே அரூர் ஸ்ரீ பாலகுரு ஐயப்பனின் 19ஆம் ஆண்டு விழாவையொட்டி யானையில் அமர்ந்து, ஐயப்பன் சுவாமி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 26, 2022, 7:44 PM IST

தருமபுரி அருகே யானை மீது ஐயப்பன் சுவாமி ஊர்வலம்

தருமபுரி மாவட்டம், அரூர் பாட்ஷாப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் கடந்த நவ.17ஆம் தேதி முதல் மாலை அணிந்து, 48 நாள் விரதம் இருந்து நாளை டிச.28ஆம் தேதி சபரிமலைக்கு புறப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து, வரும் ஜன.2ஆம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் அரூர் பாட்ஷாபேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் இருக்கும் ஸ்ரீ ஐம்பொன் ஸ்ரீபாலகுரு ஐயப்பனின் 19ஆம் ஆண்டு விழா நேற்று (டிச.25) நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமம், மகா தீபாராதனை, வருனாய் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஏகாதச ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, ஐயப்பன் பக்தர்கள் சார்பில் மதுரை தல்லாகுளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை லட்சுமிக்கு கஜ பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, ஐயப்பன் சுவாமியின் விக்ரகம் யானை மேல் வைத்து ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டது. அப்பொழுது வழிநெடுகிலும் உள்ள பொதுமக்கள் யானைக்கு வாழைப்பழம், கொடுத்து தொட்டு வணங்கினர்.

மேலும், யானையின் துதிக்கையால் ஆசீர்வாதம் வாங்கிச் சென்றனர். அரூர் நகர் பகுதியில் ஐயப்பப் பக்தர்கள் நடத்திய ஊர்வலத்தில் யானை மீது ஐயப்பன் வீதி உலா வந்தது, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: சென்னை புத்தக காட்சி: வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details