தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100% வாக்குப்பதிவு: தர்மபுரியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் - Dharmapuri election awarness program

தர்மபுரி: தோ்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் மாவட்டத் தேர்தல் அலுவலர் எஸ்.பி. கார்த்திகா இன்று (மார்ச் 10) தொடங்கிவைத்தார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர்

By

Published : Mar 10, 2021, 4:09 PM IST

கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகா, "தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

100% வாக்குப்பதிவு

வாக்காளர்கள் அனைவரும் தவறாது 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும். நேர்மையான முறையில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை கல்லூரி மாணவ, மாணவிகள் வாக்காளர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மற்ற ஆவணங்களைக் காட்டி, தவறாமல் வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

தர்மபுரி பேருந்து நிலையத்திலும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்டத் தேர்தல் அலுவலர் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் தேர்தல் உதவி அலுவலர் மு. பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details