தருமபுரியில் போதை விழிப்புணர்வு வீதி நாடகம்! - விழிப்புணர்வு
தருமபுரி: போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நாடகத்தை தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் அரங்கேற்றினர்.
போதை பொருட்களால் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மது அருந்துதல், புகைப்பழக்கம் போதை பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், குடும்பத்தினர் மற்றும் அருகிலுள்ளவர்களின் உடல் நலத்துக்கு எவ்வாறெல்லாம் கேடு ஏற்படுகிறது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை கல்லூரி மாணவ மாணவியர் நடித்துக் காட்டினர். இதனை ஏராளமான பொதுமக்கள், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கண்டு களித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.