தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி மாவட்டத்திற்கு விருது! முதலமைச்சர் வழங்கினார்!

தருமபுரி: குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய தருமபுரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி சிறப்பித்தார்.

function
function

By

Published : Feb 24, 2021, 7:54 PM IST

தமிழகத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதியை தமிழ்நாடு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டு, இந்நாளில் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் மூன்று மாவட்டங்களுக்கு பரிசுகள், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள், பாராட்டு பத்திரங்கள் மற்றும் மாநில அரசு விருதுகள் ஆகியவை சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. நாமக்கல் மாவட்டம் முதல் விருதையும், தருமபுரி மாவட்டம் இரண்டாவது விருதையும், திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாவது விருதையும் பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி மாவட்டத்திற்கு இரண்டாவது விருது, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரங்களை, மாவட்ட ஆட்சியர் கார்த்திகாவிடம் வழங்கினார். தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாலின சமத்துவத்தை உயா்த்த தொடா்ந்து அரசு அறிவித்து வரும் நலத்திட்டங்களை செயல் படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாசடைந்த நொய்யல் ஆறு! விவசாயிகள் இழப்பீடு பெற அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details