தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்! போலீஸ் விசாரணை!

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

auto driver hanged dead in dharmapuri, ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்
ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்

By

Published : Feb 6, 2020, 12:55 PM IST

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தனியார் நூற்பாலை எதிரில் வசித்து வந்த மாரியப்பனின் மகன் அழகரசன்(31). இவர் பொம்மிடி தொடர்வண்டி நிலையம் அருகில் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கும், பொம்மிடி அருகேயுள்ள திப்பிரெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்த சரண்யா(28) என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவனை இழந்த சரண்யாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அழகரசன் செய்து வந்துள்ளார். ஆனால், சில மாதங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் இரண்டு சீன இளைஞர்களுக்கு கொரோனா?

இதையடுத்து நேற்றிரவு 10 மணியளவில் வெளியே சென்ற அழகரசன், வீடு திரும்பவில்லை. அதன்பின், இரவு 12 மணிக்கு சரண்யா வீட்டில் இருந்த கிளை இல்லாத முருங்கை மரத்தில் புடவையால் கழுத்தில் சுற்றப்பட்டு முட்டி போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல் துறையினர், அழகரசனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்! போலீஸ் விசாரணை

இதற்கிடையில் இன்று காலை 10 மணியளவில் உறவினர்கள் அனைவரும் அழகரசனை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டனர் என்றும் கொலையாளிகளை உடனே பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் கலைந்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, அழகரசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details