கரோனா வைரஸ் தொற்றுக் கட்டுப்படுத்தும் விதத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவத் தேவைகளுக்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை அம்மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்க்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்துவோர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077க்கு தொடர்பு கொண்டு, தங்களது முகவரி குறித்து விவரம் தெரிவித்தால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். தர்மபுரி நகர எல்லைக்குள் பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் செல்ல ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 6 ஆட்டோக்கள், நான்கு முனைச் சாலை சந்திப்பில் மூன்று ஆட்டோக்கள், ஒட்டப்பட்டி, நல்லம்பள்ளியில் தலா மூன்று ஆட்டோக்கள் என மொத்தம் 15 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.