தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! - Anti-Corruption Department

தருமபுரி: நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ஏழு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர்.

தருமபுரி
தருமபுரி

By

Published : Nov 12, 2020, 6:06 PM IST

தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இன்று மதியம் 2 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையில் கணக்கில் வராத ஏழு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கண்டறிந்தனர்.

நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், கோட்டப் பொறியாளர் தனசேகரனிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details