இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தருமபுரி-மொரப்பூரிடையே இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டம், தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு. இத்திட்டத்துக்காக பாமக தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து வந்தது.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்த இந்த திட்டத்துக்காக ரூ.358.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த மார்ச் 4ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, முதற்கட்ட பணிக்காக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் பணிகள் நடந்துவருகிறது.
இந்நிலையில், ரயில் பாதை அமைக்கும் 36 கி.மீ தொலைவு கொண்ட இந்த திட்டத்தில் தற்போது 28 கி.மீ தொலைவுக்கான நிலம் குறித்த ஆவணங்கள் தெளிவாக உள்ளது. மீதமுள்ள 8 கி.மீ தொலைவு நிலங்கள் ஆக்கிரமிப்புகளாக உள்ளன.
எனவே இந்நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்குமாறு தமிழ்நாடு அரசிடம் மத்திய ரயில்வே துறை கோரிக்கை வைத்துள்ளது. இந்த 8 கி.மீ தூர நிலம்தான் ரயில் பாதை அமைக்க தற்போது பிரச்னைக்கு உரியதாக உள்ளது. எனவே இதை கையகப்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.
இதற்காக தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளித்து ஆட்சியரிடம் பேசி குழு அமைத்து விரைவாக நிலத்தை கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் வழங்கினால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் திட்டம் நிறைவேறும்” என்றார்.