தர்மபுரி: நகராட்சி மற்றும் 10 பேரூராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசுகையில்,
”2014 எம்பி தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள், அதற்கு நன்றி. தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை 2500 கோடி. மது விற்பனையில் விழுப்புரம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே போட்டியிட்டுக்கொண்டிருப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிழைப்பிற்காக அண்டை மாநிலங்களிலும், அண்டை மாவட்டங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இதற்கு காரணம் தர்மபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பின்மை. அதனைப் போக்க சிப்காட் அமைக்க வேண்டும் என்பதை ஜெயலலிதாவும், கருணாநிதியும் நிறைவேற்றவில்லை.
தற்போது உள்ள திமுக என்ன செய்யப்போகிறது என தெரியவில்லை. தர்மபுரி நகராட்சியை பாமக கைப்பற்றும். பாமக தலைவரானால் தர்மபுரி நகராட்சியில் மதுக்கடைகள் இருக்காது என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.