சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலமைச்சர், இன்று (பிப்.9) கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டம் வழியாக சேலம் சென்றார்.
அப்போது, கிருஷ்ணகிரி - தர்மபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலம் பகுதியில் முதலமைச்சர் பழனிசாமியை தமிழ்நாடு உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.