தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் ஒருவர், திருப்பூரிலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களை பேருந்து மூலம் அஸ்ஸாம் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அதையடுத்து அவருக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் அவரை சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
தருமபுரியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு - தருமபுரியில் கரோனா
தருமபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவமனைதருமபுரி அரசு மருத்துவமனை
பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மேலும், தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.