தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் (தனி) அமமுக சார்பில் வேட்பாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.ஆர். முருகன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அரூர் தொகுதி நிலவரம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய அவர், "அரூர் தொகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. காசு கொடுத்து கூட்டத்தை சேர்ப்பதில்லை. மக்கள் முழு மனதோடு வரவேற்கிறார்கள். 25 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்த பணிகளையும் ஒரு வருடம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது நான் செய்த பணிகளையும் பார்த்து மக்கள் வாய்ப்பளிப்பார்கள்.
மக்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் மலை கிராமத்திற்கு வனத்துறையிடம் சிரமப்பட்டு அனுமதி வாங்கி சாலை அமைத்தேன். செனகல் நீர் திட்டம் எனது கனவுத் திட்டம். இத்திட்டம் நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டால், அரூர் பகுதியில் இருந்து மக்கள் வேலை தேடி திருப்பூர் செல்ல மாட்டார்கள்.
மக்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் விவசாயம், தொழில் வளம் பெருகும். குறிப்பாக அரூரில் மின்தடை பிரச்னையை தீர்த்து வைத்ததில் எனக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் அதனை விளம்பரப்படுத்தி கொள்ளவில்லை. இருப்பினும், மக்கள் மன்றத்தில் நீதி கோரியுள்ளேன். மே 2ஆம் தேதி மக்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்" என்றார்.
மக்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் இதையும் படிங்க: தர்மபுரி தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்!