தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மீண்டும் ஜெயலலிதா ஆட்சியே தொடரும்!’ - தர்மபுரி அண்மைச் செய்திகள்

தர்மபுரி: காரிமங்கலம் பகுதிக்குள்பட்ட கெரகோடஅள்ளியில் வாக்களித்த அமைச்சா் கே.பி. அன்பழகன், மீண்டும் ஜெயலலிதா ஆட்சியே தொடரும் எனச் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் வாக்குப்பதிவு
அமைச்சர் கே.பி.அன்பழகன் வாக்குப்பதிவு

By

Published : Apr 6, 2021, 10:40 AM IST

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் ஐந்தாவது முறையாக உயர் கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 6) தன் சொந்த கிராமமான கெரகோடஅள்ளி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் அமைச்சா் கே.பி. அன்பழகன் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

அமைச்சர் கே.பி. அன்பழகன் வாக்குப்பதிவு

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், “ஐந்தாவது முறையாக பாலக்கோடு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். மீண்டும் வெற்றிபெறுவேன்.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக அமோக வெற்றிபெற்று, 2021ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார். தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியே தொடரும்” என்றார்.

இதையும் படிங்க : மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ-களின் சொத்து மதிப்பு -ஒரு பார்வை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details