பாஜக வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை , ” கோபாலபுரம் வீட்டில் பிறந்ததால் மட்டும் கட்சித் தலைவராக இருக்கக்கூடிய ஸ்டாலின், கோபாலபுரம் வீட்டில் பிறந்ததால் மட்டும் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் இருக்கக்கூடிய கட்சியின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மட்டும் புலியாக இருக்கிறார். ஆனால் விவாதத்திற்கு அழைத்தால் ஓடிப்போகிறார் “ என்றார்.
கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார் அமித் ஷா! - அண்ணாமலை தகவல் - அமித் ஷா
தருமபுரி: தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆளுநரின் முடிவு கட்சியின் முடிவை போன்று இருக்கும். ஆனால், பாஜக ஆட்சியில் ஆளுநர்கள் சுதந்திரமாக செயல்படும் நிலை இருக்கிறது. 7 பேர் விடுதலை தொடர்பான முடிவு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. அதை பற்றி கருத்து கூற முடியாது. வரும் 21ஆம் தேதி தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். யார் யாரை சந்திக்கிறார் என்று தற்போது கூற முடியாது “ என்று கூறினார்.
இதையும் படிங்க:'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்!