தர்மபுரிமாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 37 நாட்களாக நீர்வரத்து அதிகரித்திருந்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு ஒகேனக்கல் ஆற்றுப்பகுதி மற்றும் மெயின் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இன்று நீர்வரத்து 16,000 கன அடியாக குறைந்ததை அடுத்து, கோத்திகல்பாறை வழியாக பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் ஒகேனக்கல் மெயின் அருவி செல்லும் வழி மற்றும் மெயின் அருவியில் உள்ள தடுப்புக்கம்பிகள் சேதம் அடைந்துள்ளதால், இதனை அகற்றிய பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.