கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.அதையொட்டி, தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் செய்வதுமற்றும் வாக்கு சேகரிப்பின்போது முன் அறிவிப்பு தெரிவித்தல் உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
விருத்தாசலத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் - காவல்நிலையம்
கடலூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி விருத்தாசலம் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆய்வாளர் ஷாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தஅனைத்து கட்சி நிர்வாகிகளும்கலந்து கொண்டனர்.