தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தருமபுரி, நல்லம்பள்ளி, கடத்தூர் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதிகளில் இம் மாதம் 27ஆம் தேதியும் மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர் பகுதியில் இம்மாதம் 30ஆம் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மலர்விழி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி, "தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்த அரசியல் கட்சியினர் தங்கள் ஒத்துழைப்பைத் தரவேண்டும். மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல் 27ஆம் தேதி 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும். 103 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 138 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 1,284 ஊராட்சி வார்டு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இரண்டாம் கட்டமாக 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் 85 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 113 கிராம ஊராட்சித் தலைவர்கள், 1059 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதிவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தலைவர், துணைத்தலைவர் பதவிகள் ஏலம்: மாநிலத் தேர்தல் ஆணையர் எச்சரிக்கை