உழைப்பாளர் தினமான இன்று (மே 1) தமிழ் திரைத்துறையின் முக்கிய நடிகரான அஜித்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அஜித் பிறந்தநாள்: ரசிகர்கள் ரத்த தானம்! - ரத்த தானமுகாம்
தருமபுரி: நடிகர் அஜித் குமாரின் 48ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 48 பேர் ரத்த தானம் செய்து பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனா்.
File pic
அந்த வகையில், தருமபுரியில் அஜித்தின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 48 கிலோ எடைகொண்ட கேக் வெட்டியும், முதியோர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கியும், ரத்த தானம் செய்தும் அவர்கள் ‘தல’ என பாசத்துடன் அழைக்கும் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.