தர்மபுரி: வன்னியர் திருமண மண்டபத்தில் தர்மபுரி அமமுக மாவட்ட செயற்குழு கூட்டம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு டிடிவி தினகரன் சிறப்புரையாற்றினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக செயற்குழு உறுப்பினர்களுக்கு 25 லட்சம் முதல் 5 கோடி வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது என்று நான் தெரிவித்தேன். இதற்கு கே.பி.முனுசாமி மானநஷ்ட வழக்கு தொடர்வதாக பேட்டி அளித்திருக்கிறார்.
மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திப்பேன்.பொதுமக்கள் பேசியதை தான் நான் பேசினேன். காலை 11 மணி வரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருபவர்கள் மாலை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஞானோதயம் வந்தது. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.