திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பரப்புரை, பொது நிகழச்சிகளுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்து வருவதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். திமுக தலைவர்களின் இத்தகையப் போக்கை கண்டித்து அதிமுக சார்பில் தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! - admk protest
தர்மபுரி: முதலமைச்சர் பழனிசாமியை தொடர்ந்து விமர்சித்துவரும் திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, வெற்றிவேல் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கூடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அதிமுக ஆர்ப்பாட்டத்தால் எஸ்.வி.ரோடு சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.