தருமபுரி மாவட்டத்தில் 8 ஒன்றிய தலைவா் பதவிகளை அதிமுக கூட்டணி கைபற்றியது. அதில் நல்லம்பள்ளி, தருமபுரி, கடத்துா், அரூா், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய தோ்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று 8 ஒன்றிய தலைவர்கள் பதவியை கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.